150 கோடி போச்சா.. தலையில் துண்டைப்போட்ட நெட்பிலிக்ஸ்! எல்லாரும் ராஜமௌலி ஆக முடியுமா

Netflix Baahubali 3
By Parthiban.A Jan 26, 2022 09:30 PM GMT
Report

எஸ்எஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி இரண்டு பாகங்களும் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. மிக பிரம்மாண்ட வசூல் சாதனை படத்தை இந்த படம் ஒட்டுமொத்த இந்தியா முழுவதில் நல்ல வசூல் ஈட்டியது.

மேலும் பாகுபலி 3ம் பாகம் Before the Beginning என்கிற பெயரில் தயாரிப்பதாக அறிவித்தது நெட்பிலிக்ஸ் நிறுவனம். அதன் பணிகளும் நடைபெற்று வந்தது. ஆனால் இயக்குனர் ராஜமௌலி இல்லை.

இந்நிலையில் தற்போது வரை உருவாகி இருக்கும் படத்தின் காட்சிகள் திருப்திகரமாக இல்லை என சொல்ல படத்தையே கைவிடுவதாக அறிவித்து உள்ளது நெட்பிலிக்ஸ்.

இதுவரை செலவு செய்திருக்கும் 150 கோடி ருபாய் பணத்தை தண்ட செலவு கணக்கில் எழுதிவிட்டனர். அந்த நிறுவனத்துக்கு இது மிக சிறிய தொகை தான் என்றாலும்.. எல்லாரும் ராஜமௌலி ஆகிவிட முடியுமா என்பதை படத்தை தொடங்கும் முன்பே யோசித்து இருக்கலாம்.