டோரேமான் ஜியான் கதையை சுட்டுட்டாங்களா? பத்தா பட கதையை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Vijay Sethupathi Gossip Today Tamil Movie Review Baththa
By Jai Oct 03, 2026 08:15 AM GMT
Report

பத்தா

மகாராஜா, தலைவன் தலைவி போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளியாகியுள்ள படம் தான் பத்தா. டிரெய்ன், ஸ்லம்டாக் படங்கள் விரைவில் அவர் நடிப்பில் வெளியாகவுள்ள நிலையில் பத்தா படம் ரிலீஸான முதல் நாளிலேயே நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

டோரேமான் ஜியான் கதையை சுட்டுட்டாங்களா? பத்தா பட கதையை கலாய்க்கும் நெட்டிசன்கள்.. | Netizen Trolled Vijay Sethu Baththa Doraemon Gian

பத்தா படத்தை பிரியா அட்லீ தயாரித்த நிலையில், முதல் நாளில் ரூ. 4 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது.

இந்நிலையில் நெட்டிசன்கள் இணையத்தில் ஒரு கருத்தை கூறி பத்தா படத்தை கலாய்த்து வருகிறார்கள்.

டோரேமான் ஜியான்

அதுவும், பத்தா படத்தை பார்க்கும் போது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்தும் வருகிறார்கள். அதாவது டோரேமான் கார்ட்டூனில் ஜியான் பயங்கர பலசாலியாகவும் அனைவரையும் அடி பொளக்கும் ஆளாகவும் இருப்பான்.

டோரேமான் ஜியான் கதையை சுட்டுட்டாங்களா? பத்தா பட கதையை கலாய்க்கும் நெட்டிசன்கள்.. | Netizen Trolled Vijay Sethu Baththa Doraemon Gian

அதைவிட அவன் பாட்டு பாட ரொம்பவே விருப்பப்படுவான், ஆனால் அவன் பாடினால் அதையாராலும் கேட்க முடியாது, ஊரே ஓடிவிடும், அப்படியொரு கதையைத்தான் பாலாஜி தரணிதரன் டோரிமான் கதையை சுட்டு விஜய் சேதுபதியை வைத்து எடுத்துள்ளார் என்று ரோஸ்ட் செய்து வருகிறார்கள்.