நேற்று விஜய்! இப்போ தனுஷா? இப்படி எப்படி தான் ரூம்போட்டு யோசிக்கிறாங்களோ
கொரோனா வைரஸின் தாக்கம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் அதிகமாக இருந்ததால் சில வாரங்கள் லாக்டவுன் போட்டனர். பொங்கள் அன்று வெளியாக இருந்த படங்கள், படப்பிடிப்புகள், போஸ் பிரடொக்ஷன் உள்ளிட்ட சினிமா சார்ந்த பல வேலைகள் முடங்கியது. தற்போது அதிலிருந்து விலக்கு பெற்று மீண்டும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு படங்களில் வெளியீட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.
அப்படி நடிகர் விஜய்யின் பீஸ்ட் பட பாடலான அரபிக் குத்து பாடலை வெளியிட்டு சாதனைகளை பெற்று வருகிறது. அனிரூத் இசை, சிவகார்த்திகேயன் வரிகள், விஜய், பூஜா ஹெக்டே நடனம் என்று பட்டித்தொட்டியெங்கும் பரவி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அப்படி இருக்கையில் விஜய் கழித்தில் இருக்கும் ஜெயின் சிலுவை மையப்படுத்துவதாக வதந்திகள் பரவி வருகிறது.
அதற்கு அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை கப்பலில் இருக்கும் ஹாங்கர் சிம்பிள் தான் அது என்று கூறியுள்ளார்கள் விஜய் ரசிகர்கள். இதை எப்படிடா கண்டுபிடிக்கிறீங்க. ரூம்போட்டு யோசிப்பிங்களோ என்று கலாய்த்து வருகிறார்கள். அது அப்படி என்றால் நடிகர் தனுஷ் மாறன் படப்பிடிப்பில் ஹைதராபாத்தில் இருக்கும் நிலையில் அங்கு இளம் பெண்ணுடன் ஓட்டலில் உணவு அருந்துவது போல் புகைப்படம் வெளியாகி வைரலானது.
அதையும் சிலர் யார் அது என்று பல கேள்விகளை கேட்டு ரூமர் செய்திகளை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளனர். அவரின் ஆடை வடிவமைப்பாளர் தான் வேறு எதுவும் கிடையாது என்று கூறி வருகிறார்கள். இப்படி எதாவதொரு விஷயம் கிடைத்தால் போது கிடைக்கிற கேப்பில் கெடா வெட்டுராங்களே என்று புலம்பி வருகிறார்கள். இன்னும் அஜித், ரஜினி தான் மிச்சம் இருக்காங்க...
