தல தீபாவளி அதுவும் நடக்க முடியாமல் மகாலட்சுமியுடன் வெடி வெடித்த ரவீந்தர்.. வீடியோ..
சின்னத்திரை சீரியல் நடிகையாக ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வந்தவர் நடிகை மகாலட்சுமி. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தரை 2 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வந்தார்.
ரவீந்தர் - மகாலட்சுமி
அதன்பின் இரண்டாம் திருமணத்தை ரவீந்தருடன் முடித்து சர்ச்சைக்குள்ளானது. பல விமர்சனங்களை கண்டுக்கொள்ளாத ரவீந்தர் - மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர். கடந்த வாரம் ரவீந்தருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.. இந்நிலையில் நேற்று முன் தின நாள் தீபாவளியை தல தீபாவளியாக கொண்டாடியிருக்கிறார்கள் புது தம்பதியினர்.
தல தீபாவளி
ரவீந்தர் பட்டுவேட்டி, மகாலட்சுமி சுடிதாரில் இருவரும் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டனர். மேலும் தங்களின் வீட்டிற்கு முன் வெடிவெடித்து கொண்டாடியும் இருக்கிறார்கள்.
அந்த வீடியோவில் மருத்துவமனையில் அனுமதின்னு சொன்னாங்க வெடி வெடிக்கிறீங்க என்றும் ஏன் இப்படி ஸ்லோவாக நடக்கிறீங்க என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் எப்போது குழந்தை என்றும் சிலர் கேட்டு வருகிறார்கள்.