ட்ரோல்களால் கடுப்பாகி புலம்பிய விஜய் சேதுபதி மகன் சூர்யா..
ஃபீனிக்ஸ் சூர்யா
நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா நானும் ரவுடிதான் படத்தில் சின்ன சீனில் வந்து சென்றார். அதன்பின் சிந்துபாத் படத்தில் படம் முழுக்கவே நடித்தார் சூர்யா. தற்போது சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் ஃபீனிக்ஸ் என்ற படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்து வருகிறார்.
படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் விஜய் சேதுபதி மகன் சூர்யாவை பலர் ட்ரோல்கள் செய்து வந்த நிலையில், அவர் அளித்த பேட்டியொன்றில் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அதில் டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம், போலிஸ் மகன் போலிஸ் ஆகலாம், நடிகரின் மகன் மட்டும் நடிகராகக்கூடாதா? என்று கேள்வியை எழுப்பியிருக்கிறார் சூர்யா.
அவரின் இப்படியான பேச்சை நெட்டிசன்க டாக்டர் மகன் டாக்டர் ஆவது தான் ஏகப்பட்ட பிரச்சனை நடிகர் மகன் நடிகராவது ஈஸிதான் என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.