விக்ரம் பட ரோலக்ஸை காப்பி அடித்த விஜய் டிவி சீரியல்: கலாய்த்துத் தள்ளும் நெட்டிசன்கள்
Star Vijay
Vikram Movie
By Parthiban.A
விக்ரம் படத்தில் நடிகர் சூர்யா வரும் கெஸ்ட் ரோல் ரோலக்ஸ் அதிக அளவு ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. அந்த படத்தை பார்த்துவிட்டு அப்படியே வந்து சீரியல் எடுத்திருக்கிறார்கள் போல என தற்போது விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் தொடரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
தற்போது வெளியாகி இருக்கும் அந்த சீரியலின் ப்ரோமோ வீடியோவில் கார்த்திக் என்ற கதாபாத்திரம் பேக்டரி உள்ளே வந்து தனக்கு வணக்கம் சொல்லாத நமச்சியிடம் சண்டைபோடுகிறார்.
மேலும் தன்னை 'கார்த்திக் சார்' என்று தான் கூப்பிட வேண்டும் என கூறுகிறார் அவர். இந்த வீடியோ பார்த்து நெட்டிசன்கள் தற்போது கலாய்த்து தள்ளி வருகின்றனர்.
அவருக்கு பெரிய ரோலக்ஸ் சார்னு நெனப்பு என பலரும் கிண்டல் செய்து கமெண்ட் செய்து இருக்கின்றனர்.