ஒரு வழியாக முடிவுக்கு வரும் பாக்கியலட்சுமி சீரியல்.. அடுத்து வரும் புதிய தொடர்!
Baakiyalakshmi
Tamil TV Serials
TV Program
By Bhavya
பாக்கியலட்சுமி
ஒரு குடும்ப தலைவியின் கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி மக்கள் மனதை வென்ற தொடர் பாக்கியலட்சுமி.
சுசித்ரா, சதீஷ் ஆகியோரின் முக்கிய நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு ஜுலை மாதம் தொடங்கப்பட்ட சீரியல் இது. 1444 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இன்னும் இரண்டு வாரங்களில் முடிவுக்கு வரப்போகிறதாம்.
புதிய தொடர்!
இந்நிலையில், இந்தத் தொடர் ஒளிபரப்பு செய்யப்படும் நேரத்தில் புதிய தொடர் ஒன்று ஒளிபரப்பாக உள்ளது.
அதாவது, மகளே என் மருமகளே என்ற தொடர் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி மாமியாராகவும் வர்ஷினி சுரேஷ் மருமகளாகவும் நடிக்கின்றனர்.