நள்ளிரவு பார்ட்டியில் ரெய்டு! விஜய் சேதுபதி பட நடிகை சிக்கினார்

Drugs Niharika
By Parthiban.A Apr 04, 2022 03:42 AM GMT
Report

மாடலிங் மற்றும் சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பார்ட்டிக்கு செல்வதும், சில சமயங்களில் ரெய்டில் போலிஸிடம் சிக்குவதும் எப்போதும் நடப்பது தான்.

ஆனால் தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்தில் இருந்து ஒரு நடிகை தற்போது இப்படி போலீஸ் ரெய்டில் சிக்கி இருப்பது சினிமா துறையினருக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது.

விஜய் சேதுபதியின் 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' படத்தில் நடித்து இருந்த நடிகை நிஹாரிகா தான் தற்போது போதை பார்ட்டி ஒன்றில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அங்கு drugs பயன்படுத்தப்பட்டது உறுதியாகி இருக்கிறது.

நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாக பாபுவின் மகள் தான் நிஹாரிகா. அவரையும் அவரது நண்பர்களையும் காவல் நிலையம் கூட்டி சென்று விசாரணை நடத்தி அதன் பின் வீட்டுக்கு அனுப்பி இருக்கின்றனர்.

போலீஸ் நிலையத்தை விட்டு அவர் வெளியே வரும்போது மீடியா மற்றும் மக்கள் அவரை சூழ்ந்துகொண்டனர். ஆனால் மீடியாவின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அவர் வெளியேறிவிட்டார்.