நான் ஒரு கஞ்சன்...10, 20 லட்சத்துக்கு ஆசைப்பட பயம்!! நிகிலா விமல் ஓபன் டாக்..

Nikhila Vimal Tamil Actress Actress
By Jai Oct 18, 2026 01:15 PM GMT
Report

தமிழ், மலையாளம் மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை நிகிலா விமல். சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டியொன்றில் சேமிப்பு மற்றும் முதலீடு குறித்த கேள்விக்கு தன்னுடைய எளிய மற்றும் பாதுகாப்பான பார்வைகள் குறித்து பேசியுள்ளார்.

நான் ஒரு கஞ்சன்...10, 20 லட்சத்துக்கு ஆசைப்பட பயம்!! நிகிலா விமல் ஓபன் டாக்.. | Nikhila Vimal About Her Fear Of Investing Money

அதில், நான் சேமிப்பு உள்ளிட்ட விஷங்களில் மிகவும் மோசமானவள், பணத்தை எங்கும் முதலீடு செய்யமாட்டேன். ஆனால் தேவை இல்லாமல் செலவழிக்காமல் சேமித்து வைப்பேன். நான் அப்படியொரு கஞ்சன். ஆனால் கையிலிருக்கும் பணத்தை எப்படி இரட்டிப்பாக்குவது என்று எனக்கு தெரியாது.

நான் ஒரு கஞ்சன்...10, 20 லட்சத்துக்கு ஆசைப்பட பயம்!! நிகிலா விமல் ஓபன் டாக்.. | Nikhila Vimal About Her Fear Of Investing Money

நான் மற்றும் என் குடும்பத்தினர் பண விஷயத்தில் இன்னும் பழைய பாணியையே பின்பற்றி வருகிறோம். என்னிடம் 5 லட்சம் ரூபாய் இருக்கிறது என்றால், யாராவது வந்து அப்பணத்தை ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்து 10, 20 லட்ச ரூபாயாக மாற்றலாம் என்று சொன்னால், என் அம்மாவுக்கு பயமாக இருக்கும், எனக்கும் பயமாகத்தான் இருக்கும்.

பேராசைப்பட்டு இருக்கும் 5 லட்சத்தையும் இழந்துவிடக் கூடாது. அதை பத்திரமாக பார்த்துக்க்கொள்ள வேண்டும் என்றுதான் நாங்கள் நினைப்போம் என்று கூறியிருக்கிறார் நிகிலா விமல்.