கோழிக்கு ஒரு நியாயம்!! பசுக்கு ஒரு நியாயமா? சர்ச்சையில் சிக்கிய நடிகை நிகிலா விமல்

Sasikumar Nikhila Vimal
1 மாதம் முன்
Edward

Edward

சினிமா நட்சத்திரங்கள் சிலர் சர்ச்சையான கருத்தினை கூறி பிரச்சனையில் சிக்குவது வழக்கம். அப்படி மலையாள நடிகையாக தமிழில் வெற்றிவேல் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை நிகிலா விமல்.

இப்படத்தினை அடுத்து கிடாரி, தம்பி, ரங்கா போன்ற படங்கள் மூலம் பிரபலமாகியுள்ளார். சமீபத்தில் சத்யராஜ் மகன் சிபி நடிப்பில் உருவான ரங்கா படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் பிரமோஷனுக்காக சமீபத்தில் பேட்டி கொடுத்தும் வந்தார். தற்போது மலையாள படம் ஒன்று அவர் நடிப்பில் வெளியாகவுள்ளது

மலையாள ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியொன்றில் மாட்டிரைச்சி விவகாரம் சமீபகாலமாக சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. அதுபற்றி உங்களின் கருத்து என்கிற கேள்வி கேட்கபட்டது. அதற்கு நிகிலா விமல், மாட்டை வெட்டகூடாதா? இல்லையா? என்கிற விதிகள் நம்முடைய மாநிலத்தில் இல்லை.

தற்போது தான் அந்த விசயம் அதிகரித்து வருகிறது. அப்படி பாதுகாக்க வேண்டும் என்றால் அனைத்து விலங்குகளையும் தான் பாதுகாக்க வேண்டும். வெட்டக்கூடாது என்று அனைத்து விலங்கையும் தான் வெட்டக்கூடாது.

கோழிக்கும் ஒரு நியாயம்!! மாட்டுக்கு ஒரு நியாயமா? மாற வேண்டும் என்றால் அனைத்தையும் மாற்றுங்கள் என்று கூறியுள்ளார். தற்போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.