நினைத்தேன் வந்தாய் சீரியல் : கட்டிப்புடி கட்டிப்புடிடா பேக்ரவுண்ட்..ரொமான்ஸ் காட்சியில் நடிகை அபிராமி..

Ganesh Venkatraman Serials Tamil TV Serials Abhirami Venkatachalam
By Edward Nov 08, 2024 03:45 AM GMT
Report

நினைத்தேன் வந்தாய்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் இரவு 6 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் நினைத்தேன் வந்தாய். நடிகர் கணேஷ் வெங்கட், நடிகை கீர்த்தனா, அஞ்சலி ராவ், பிக்பாஸ் நடிகை அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்.

தற்போது டிஆர்பிக்காக சீரியலில் ரொமான்ஸ் காட்சி வைத்துள்ளது ட்ரோல் கண்டெண்டாக மாறியிருக்கிறது. ஆரம்பத்தில் சுடர் என்ற ரோலில் நடிகை ஜாஸ்மின் என்பவர் நடித்து வந்த நிலையில், திடீரென அவர் விலகிவிட்டார். அவருக்கு பதில் நடிகை அபிராமி சுடர் ரோலில் நடித்து வருகிறார்.

நினைத்தேன் வந்தாய் சீரியல் : கட்டிப்புடி கட்டிப்புடிடா பேக்ரவுண்ட்..ரொமான்ஸ் காட்சியில் நடிகை அபிராமி.. | Ninaithen Vandhai Serial Trolling Netizens

ரொமான்ஸ் காட்சி

சீரியலில் கொஞ்சம் மந்தம் ஏற்பட்டுள்ளதால் டிஆர்பியை ஏற்ற கதாநாயகனுடன் ரொமான்ஸ் காட்சியை ஒளிப்பரப்பியுள்ளார்கள்.

அதில் அபிராமி, கணேஷ் வெங்கட், இருவரும் அறையில் இருக்கும் போது ரொமான்ஸ் காட்சி அமைய, கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற குஷி பட பாடல் பேக்ரவுண்டில் போட்டுள்ளனர். தற்போது இது சீரியலா? இல்லை வேற ஏதாவது படமா என்று ட்ரோல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.