இரண்டாம் திருமணம் செய்யும் விஜய் டிவி சீரியல் நடிகை! மாப்பிள்ளை போட்டோ இதோ

Actors
By Parthiban.A Jun 30, 2022 02:06 AM GMT
Report

விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் 2 தொடரில் வடிவு என்ற வில்லி ரோலில் நடித்து வந்தவர் தீபா. அவர் தற்போது மேலும் சில தொடர்களில் நடித்து வருகிறார். சன் டிவி பிரியமான தோழி, ஜீ தமிழ் அன்பே சிவம் போன்ற தோழர்களில் நடிக்கிறார் அவர்.

சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். மகனுடன் அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் தீபா வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தீபா விரைவில் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் சாய் கணேஷ் பாபு என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வருகிறாராம்.

அவரை தான் விரைவில் தீபா இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போகிறார். 

GalleryGalleryGallery