முஸ்லீம் என்றால் வீடு இல்லை.. அறந்தாங்கி நிஷா செய்ததை பாருங்க
அறந்தாங்கி நிஷா
விஜய் டிவியின் பிரபல காமெடி பேச்சாளர் அறந்தாங்கி நிஷா சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர். டிவி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி அவர் பட்டிமன்றங்கள், மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் கலந்துகொண்டு வருகிறார்.
அதுமட்டுமின்றி நிஷா பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டுள்ளார். சில படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் தனக்கு வாழ்க்கை கொடுத்த விஜய் டிவியிலும் அவர் தொடர்ந்து பயணித்து வருகிறார்.
செய்ததை பாருங்க
அந்த வகையில், தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். அறந்தாங்கி நிஷா சென்னைக்கு வந்த புதிதில் வாடகை வீடு தேடும்போது ஆர்ட்டிஸ்ட் என்றால் தரமாட்டேன் என்றார்களாம்.
அதன் பின் முஸ்லீம் என்றால் வீடு தரமாட்டேன் என கூறுவர்களாம். அதனால் தற்போது சொந்தமாகவே ஒரு வீட்டை சென்னையில் வாங்கி இருக்கிறார் நிஷா.
தற்போது அதன் புகைப்படங்களை அவர் மகிழ்ச்சியாக வெளியிட்டு இருக்கிறார். இது பெரிய பங்களா எல்லாம் இல்லை, 1 BHK வீடு தான் எனவும் அவர் கூறியுள்ளார்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/cd080e3b-f9d9-4b09-a83b-7b0bbdc5dd27/25-67aaf318e8052.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/660ac89e-4406-4582-8bd8-62695a72de1a/25-67aaf319a2ca6.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/14ded715-2f60-4241-8c59-9e80aef3c041/25-67aaf31a441b2.webp)