வனிதாவுடன் நடனமாடிய சுரேஷை கிண்டல் செய்த அரந்தாங்கி நிஷா! விழுந்து சிரித்த ரம்யா கிருஷ்ணன்..

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிய ஹிட் கொடுத்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த ஆண்டு பிக்பாஸ் 5 சீசன் ஆரம்பிக்க போகும் நிலையில் பிக்பாஸ் பிரபலங்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி. நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிகர் நகுல் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன் தன்னை அசிங்கப்படுத்தியும் தரம் தாழ்த்தி பேசி வருகிறார்கள் என்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார்.

அதற்கான அறிக்கையை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததை அடுத்து மூத்த நட்சத்திரம் தான் வனிதா வெளியேறியதற்கு காரணம் என்றும் அவர் மறைமுகமாக கூறியுள்ளார். தற்போது அவர் நடிகை ரம்யா கிருஷ்ணன் செயல் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. வனிதா கலந்து கொண்ட கடைசி எபிசோட்டின் போது நடிகை ரம்யா கிருஷ்ணன் 10ற்கு 1 மதிப்பெண் கொடுத்ததால் தான் இதற்கு காரணம் என்று வெளியானது.

தற்போது வனிதா வெளியேறியதால் அவருடன் ஆடிய சுரேஷ் அவர்கள் வரும் வார நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். அதன் வீடியோ தொலைக்காட்சி குழு பிரமோவாக வெளியிட்டுள்ளது. நடனமாடிய போட்டியாளர்களிடம், சில போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதில் அறந்தாங்கி நிஷாவிடம் சுரேஷ் கேள்வி எழுப்பி,

அவர் கொடுத்த பதில் தனக்கு திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ளார். இதற்கு நிஷா, உங்களது பார்டனரையே சமாதானம் செய்ய முடியவில்லை என்று அளித்துள்ள பதிலால் ஒட்டுமொத்த அரங்கமும் சிரிப்பலையில் மூழ்கியது. அதுமட்டுமின்றி இதனைக் கேட்ட ரம்யாகிருஷ்ணன் மகழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்