நித்யானந்தா சமாதி நிலையில் இருக்காரா? இப்படி படுத்த படுக்கையில் எலும்பும் தோலுமா மாறிட்டாரே!!
ஆன்மீகத்தை பயன்படுத்தி பல போலி சாமியார்கள் உருவெடுத்து மக்களை ஏமாற்றி வருவது அதிகரித்து வருகிறது. அப்படி உருவாகி பல வழக்குகளில் சிக்கியவர் நித்யானந்தா.
ஆள் கடத்தல், பாலியல் புகாரன குற்றச்சாடுகள் அவரை நோக்கி பாய்ந்த நேரத்தில் தனித்தீவினை உருவாக்கியுள்ளதாக கூறி சொற்பொழிவும் ஆற்றி வந்தார். சமீபத்தில் உடல் நிலை சரியில்லாமல் ஆள் மறைந்துவிட்டார் என்ற செய்தியும் இணையத்தில் கசிந்தது.
அதெல்லாம் பொய் கூறி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நித்யானந்தா. புகைப்படத்தில் எலும்பும் தோலுமாக மாறி படுத்த படுக்கையில் இருக்கிறார். 27 மருத்துவர்கள் தற்போது சிகிச்சை அளித்து வருவதால் என்னால் இன்னும் வெளியேவர முடியவில்லை.
பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் உள்வாங்கி வருவதாகவும் சிக்கிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூட எனக்கு என்ன பிரச்சனை என்று கண்டறியமுடியவில்லை என்றும் கூறியுள்ளார் நித்யானந்தா.
பழைய நியாபங்கள் இல்லாமல் கண்டறிய சிரமப்படுகிறேன் என்று கூறியதோடு நான் சாகவில்லை சமாதி நிலையில் இருக்கிறேன் மீண்டு வருவேன் என்று தெரிவித்துள்ளாராம்.