பட வாய்ப்பு வேணுமா.. நடிகையிடம் தவறாக நடந்தாரா நிவின் பாலி? பெண் கொடுத்த புகார்
Sexual harassment
Nivin Pauly
By Parthiban.A
நடிகைகள் படவாய்ப்புக்காக படுக்கைக்கு வர வேண்டும் என்கிற மோசமான அழுத்தத்திற்கு உள்ளாவதாக வந்த ஹேமா கமிட்டி அறிக்கை தற்போது பெரிய சர்ச்சைகளை சினிமா துறையில் கிளப்பி விட்டிருக்கிறது.
மலையாளம் மற்றும் தமிழில் ஏராளமான படங்களில் நடித்து இருக்கும் நிவின் பாலி பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார்.
இந்த பூனையும் பால் குடிக்குமா என எல்லோரும் ஷாக் ஆகும் வகையில் தற்போது பெண் ஒருவர் நிவின் பாலி மீது பாலியல் புகார் கூறி இருக்கிறார்.
பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை வெளிநாட்டில் நிவின் பாலி தவறாக பயன்படுத்தியதாக அந்த பெண் போலீசில் புகார் கூறி இருக்கிறார். இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
ஆனால் இதில் துளி கூட உண்மை இல்லை, அதை சட்டப்படி நிருபிக்க என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என நிவின் பாலி பதில் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.