நிக்சன் வினுஷாவை உடம்பை அப்படி பேசியது ரொம்ப மோசம்!! களமிறங்கிய பிக் பாஸ் பிரபலம்
பிக் பாஸ் வீட்டில் நிக்சன் வினுஷாவை பற்றி உடல் கேலி செய்துள்ளார். இதற்கு கமல் ஹாசன், சக போட்டியாளர்கள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.
வார இறுதியில் கமல் ஹாசன் இது தொடரப்பாக பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அதை பேசாமல் மழுப்பி சென்றுவிட்டார். இதனால் கமலுக்கு எதிராக நெட்டிசன்கள் சிலர் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
பிரபல பாடகியும் பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர் ரம்யா தற்போது நடந்து வரும் பிக் பாஸ் சீசன் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நிக்சன் வினுஷாவை உடல் கேலி செய்தது ரொம்ப தவறு.
ஒருவருடைய அழகை வைத்து இந்த மாதிரி பேசுபவர்கள் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
என்னையும் பலர் உடல் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்து இருக்கிறார்கள். நான் குண்டாக இருக்கிறேன் என்று சொல்லி யானை, மாடு என்றெல்லாம் என்னை என் காது படவே பேசி இருக்கிறார்கள் என்று ரம்யா கூறியுள்ளார்.