சூப்பர் ஸ்டார் வேண்டாம் அஜித் ஓகே-ன்னு சொன்ன ஐஸ்வர்யா ராய்!! மல்கோவா நடிகையை உசார் செய்த ரஜினி..

Rajinikanth Aishwarya Rai Tamannaah Nelson Dilipkumar Jailer
By Edward Jan 19, 2023 04:15 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ஆரம்பிக்கும் போது பல முன்னணி நடிகர்கள் தங்களின் அடுத்த படங்களின் வேலைகளில் பிஸியாகிவிட்டர். அப்படி விஜய் வாரிசு படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜுடன் தளபதி 62 படத்திலும், அஜித் விக்னேஷ் சிவனுடன் ஏகே62 படத்திலும் நடிக்க ஆரம்பித்துள்ளனர்.

அதேபோல் ஒரு வருடமாக படம் வெளியாகாமல் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமாருடன் ஜெயிலர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ஜெயிலர் படம் பல மொழியில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் நடிகைகளை வளைத்துபோட்டு வருகிறார்.

அப்படி ஆரம்பத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்-ஐ நடிக்க ஒப்பந்தம் செய்ய நெல்சனிடம் ரஜினிகாந்த் கேட்டிருக்கிறார். ஆனால் பட்ஜெட் அதிகமானதால் அவர் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டார்கள். அதேசமயம் அஜித்தின் ஏகே62 படத்தில் ஐஸ்வர்யா ராய் கமிட்டாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

இப்படியிருக்கும் நிலையில் ஐஸ்வர்யா ராய் என்ன நம்ம மல்கோவா நடிகை தமன்னாவை ஜெயிலர் படத்தில் கமிட் செய்ய வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

முக்கிய ரோலில் தமன்னா நடிக்கவுள்ளதாகவும் ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் தமன்னா வந்திருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் சன் பிச்சர்ஸ் வெளியிட்டுள்ளது.