25 ஆண்டுகள் காணாமல் போன நடிகை ஹீரா!! காதல் தோல்வியால் மன உளைச்சளுக்கு ஆளாகிய அஜித்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். ஆரம்பத்தில் அஜித் பல நடிகைகளுடன் ரகசிய காதலில் இருந்து அதன்பின் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் டாப் இடத்தில் இருந்து தற்போது விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
நடிகர் அஜித்தின் ஆரம்பகாலக் கட்டத்தில் தன்னுடன் நடித்த நடிகை ஹீரா மீது அளவுக் கடந்த காதலில் இருந்து வந்தார். அப்போது திருமண வரை சென்று பின் பிரேக்கப் செய்தார். இதனால் மன அழுத்தத்தில் சில காலம் சினிமாவில் கமிட்டாகுவதை நிறுத்திவிட்டார்.
இதனை தொடர்ந்து நடிகை ஹீரா கடைசியாக 1999ல் வெளியான சுயம்வரம் படத்தில் நடித்திருந்தார். அதன்பின் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆள் அடையாளம் தெரியாமலே காணாமல் போய்விட்டார்.
இந்நிலையில், தன்னுடைய யூடியூப் சேனல்களில் சினிமா சார்ந்த பல விசயங்களை பேசி வரும் சித்ரா லட்சுமணன், ஹீராவை அஜித் காதலித்தது உண்மையா என்ற கேள்வி பதிலளித்திருக்கிறார். அந்தக்காலக்கட்டத்தில் இதயம் படத்தின் கதாநாயகி ஹீரா ராஜகோபாலை பல நடிகர்கள் காதலித்தார்கள். அதில் அஜித் குமாரும் ஒருவர் என்று கூறியிருக்கிறார்.
You May Like This Video