ஜிப்ரான் தமிழ் சினிமாவின் சாபக்கேடு..மேடையில் பரபரப்பை ஏற்படுத்திய தயாரிப்பாளர் ஜே ராஜேஷ்...

Ghibran Gossip Today Tamil Producers
By Jai Jul 04, 2026 02:30 AM GMT
Report

கோட்டபாடி ஜே ராஜேஷ்

தமிழில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் அங்கீகாரம் படத்தில் பிரபல தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே ராஜேஷ் நடித்திருந்தார். படத்தின் டிரைலர் வெளியான சமயத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது பலர் மத்தியில் ஏற்பட்டிருக்கையில் படத்தின் வெற்றி விழாவில் அவர் பேசுகையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் பற்றி பேசியது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஜிப்ரான் தமிழ் சினிமாவின் சாபக்கேடு..மேடையில் பரபரப்பை ஏற்படுத்திய தயாரிப்பாளர் ஜே ராஜேஷ்... | Not Properly Recognized Ghibrans Music Angikaaram

படத்திற்கு முதலில் நாங்கள் வேறொரு எடிட்டரிடம் காட்சிகளை காண்பித்தோம். ஆனால் அவர் புரியல புரியல என்று கூறியதால் படத்தை எடிட்டர் தினேஷிடம் போட்டுக்காட்டினோம். அவரோ மொத்தமாக வேறு லெவலுக்கு மாற்றி படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகினார்.

ஜிப்ரான்

அதேபோல் இசையமைப்பாளர் ஜிப்ரான் குறித்து பேசுகையில், ஜிப்ரான் தமிழ் சினிமாவுக்கு ஒரு சாபக்கேடு. காரணம் அவருக்கான அங்கீகாரம் இன்னும் இங்கு கிடைக்கவில்லை.

ஜிப்ரான் தமிழ் சினிமாவின் சாபக்கேடு..மேடையில் பரபரப்பை ஏற்படுத்திய தயாரிப்பாளர் ஜே ராஜேஷ்... | Not Properly Recognized Ghibrans Music Angikaaram

யாரிடம் சென்று படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் என்று கூறினால், உடனே எதிரில் இருப்பவர்கள் சொல்வது, ஜிப்ரான் மிரட்டி விட்டுடுவாரு, ஆனால் என்ன பாட்டு தான் சரியா வராது என்று கூறுகிறார்கள்.

அதனால் ஜிப்ரான் நீங்களும் முட்டை, கலக்கி என்று எதாவது போடுங்கள், நீங்கள் ஒவ்வொரு படத்திற்கும் பார்த்து பார்த்து இசையமைப்பதை எல்லாம் இங்கு யாரும் பெரிதாக அங்கீகரிக்க மறுக்கிறார்கள். எப்போது உங்களுக்கும் உங்களது இசைக்கும் அங்கீகாரம் கிடைக்கிறதோ அப்போதுதான் தமிழ் சினிமா உருப்படும் என்று பேசியுள்ளார்.