நான் பொறந்ததே தப்பு!! கண்ணீர் விட்டு அழுத ஆபிஸ் சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ்
ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலில் மக்கள் மத்தியில் ஃபேவரெட் சீரியலாக இருந்து வந்தது ஆபிஸ். இந்த சீரியலில் நடிகர் கார்த்திக் ராஜ், ஸ்ருதி ராஜ் முக்கிய ரோலில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றனர்.
இந்த சீரியலுக்கு பின் கார்த்திக் ராஜ், செம்பருத்தி சீரியலில் லீட் ரோலில் நடித்து சில காரணங்களா சீரியலை விட்டு விலகி படங்களில் கவனம் செலுத்தினார். வெள்ளித்திரையும் கைக்கூடவில்லை என்பதால் மீண்டும் சின்னத்திரையில் கார்த்திகை தீபம் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் வாழ்க்கையில் நான் பண்ண தப்பு பண்ணிட்டேன், அதை திரும்ப பண்ணமாட்டேன்னு நினைக்கிற விசயம் என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு உடனே கார்த்திக் ராஜ், நான் பொறந்ததே தப்பு தான்.
பிறந்தது மேஜிக் கிடையாதுல, பிறந்ததால் தான் கஷ்டப்படுறோம். இந்த ஜென்ம்மே வேண்டாம். ரொம்ப கஷ்டமான வேலைங்க, மனுஷன்களோடு இருந்து நல்ல பேர் வாங்கனும் கெட்ட பேர் வாங்கனும், வாழுறதுக்கு பதில் நாய் குட்டியாக இருந்திருக்கலாம். நீ தப்புன்னு சொல்லிட்டே இருக்காங்களே என்று கண்ணீர் விட்டு அழுதபடி பேசியிருக்கிறார்.