ஹார்ட் பிரேக்..நிலைக்காதுன்னு தெரிஞ்சும் கூட அதை செய்வாங்க!! நடிகை திரிஷா வெளியிட்ட வீடியோ..
திரிஷா
நடிகை திரிஷாவுக்கு வளர்ப்பு பிராணிகள் மீது அதிக ஈர்ப்பாளராக திகழ்ந்து நாய்கள் வளர்த்து வருகிறார். தன்னுடைய மகன் போல் வளர்த்த ஜோரா என்ற நாய் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி இறந்துவிட்டதை நினைத்து மனமுடைந்து ஒரு பதிவினை பகிர்ந்திருந்தார். இனி என் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை என்று சொல்லி உருகினார்.

இந்நிலையில். 2.2.2025ல் இருந்து இஸ்ஸி என்ற நாயை தத்தெடுத்து மகளாக வளர்த்து வருகிறார் திரிஷா. சமீபத்தில் இஸ்ஸியை குளிக்க வைத்தப்பின் எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதன்பின் நாய்கள் வளர்ப்பவர்கள் பற்றி ஒருவர் பேசிய வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார்.
ஹார்ட் பிரேக்
அந்த நபர் கூறுகையில், நாய்கள் வளர்ப்பவர்கள் ரொம்ப துரதிஷ்டசாலிகள், தங்களின் பெஸ்ட் ப்ரெண்ட்ஸை இழக்கும் லூப்பில் தங்களை வைத்த்விடுவார்கள். நாய்களைவிட நாம் அதிகம் வாழ்வோம் என்று அவர்களுக்கு தெரியும்.

12 ஆண்டுகளில் நாய் இறந்துவிடும் என்று தெரியும். அப்படி இருக்கும்போது மனமுடைந்து போவார்கள். அதன்பின் மீண்டும் ஹார்ட் பிரேக் ஏற்படும் என்பது நன்றாக தெரிந்தும்கூட இன்னொரு நாயை எடுத்து வந்து வளர்ப்பார்கள்.
நாய்கள் இறப்பதற்கு முன் சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதை காண்பிக்க அவர்கள் தங்கள் இதயம் சிலமுறை உடைந்து போகவிடுகிறார்கள் என்று அந்த நபர் கூறியிருக்கிறார். அவர் சொன்னதை போல் ஜோரா இறந்தபோது திரிஷா மனமுடைந்து வீட்டோடு முடங்கினார். இஸ்ஸி வந்தப்பின் ச்ந்தோஷமாக இருக்கிறார்.
#Trisha insta stories pic.twitter.com/IsBrPowfC3
— Shameena (@shameena_111) March 24, 2026