திருமணமான ஒரே வாரத்தில் யூடியூபர் இர்பான் கார் மோதி பெண் மரணம்!! விசாரணையில் ஓட்டுநர்..
பல நாடுகளுக்கு சென்று உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட பலவற்றை விவரித்து யூடியூப்பில் வீடியோவாக பதிவிட்டு பிரபலமானவர் யூடியூபர் இர்ஃபான். 3 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களுக்கு மேல் வைத்துள்ள இவருக்கு சமீபத்தில் தான் பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் நடந்தது முதல் அனைத்து நிகழ்ச்சிகளையும் யூடியூப்பில் பதிவிட்ட நிலையில் அவரின் கார் மோதி பத்மாவதி என்ற பெண் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே இர்ஃபான் கார் சென்று கொண்டிருந்த போது கார் எதிரே வந்த பத்மாவதி மீது மோதி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
காரின் ஓட்டியது அசாருதீன் என்பவர் தெரியவந்துள்ளதை அடுத்து தாம்பரம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியும் பக்கத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் வருகிறார்கள்.