தனுஷ் - மம்மூட்டியின் O.M: Operation mole விமர்சனம்..
O.M: Operation mole Review: அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இன்று நவம்பர் 20 ஆம் தேதி ரிலீஸாகியுள்ள படம் தான் O.M: Operation mole. திருவண்ணாமலை, திருப்பதி ஆகிய கோயில் நகரங்களுக்கிடையே நடந்த உணை சம்பவத்தை வைத்து மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது O.M: Operation mole படம்.

தனுஷ் - மம்மூட்டி
தமிழ்நாடு - ஆந்திரா எல்லைக்குள் நடக்கும் செம்மர கடத்தலை தடுக்கும் போலீஸ் அதிகாரியாக நித்யா ரெட்டி (சாய் பல்லவி) எண்ட்ரி கொடுக்க, செம்மர கடத்தலை தடுக்க Joint Task Force அமைக்கப்பட்டு ஈடுபடும் கார்த்திகேயன் (மம்முட்டி) கேங் இருக்க, Under cover agent-ஆக திருக்குமரனை (தனுஷ்) அவருடன் போட்டோகிராஃபராக நெருக்கமாகிவிடுகிறார்.
திருக்குமரனை தன் நிழலாக பார்க்கும் கார்த்த்கேயன் 1000 டன் செம்மரங்கலை கைமாற்றிவிடு போராட, திருக்குமரன் 300 டன் செம்மரத்தை துபாயிலுள்ள அப்துலுக்கு அனுப்பிவிடுகிறார். அவருக்கு இது பிடித்துப்போக, 700 டன்னை அனுப்ப சொல்ல, அதை சாய் பல்லவி பிடித்து விடுகிறார். அப்போது நடக்கும் போராட்டத்தில் தனுஷை மம்முட்டி காப்பாற்றிவிடுகிறார்.

மற்றொரு பக்கம் லாரி ஓட்டுநராக இருக்கும் தனுஷின் தந்தை செம்மரங்களை கடத்தி வருவதாக நினைத்து அவரை சுட்டு கொன்றுவிடுகிறார்கள். நீதியை கடைபிடிக்க வேண்டிய சட்டமே தன் தந்தையின் உயிரை எடுத்துவிட்டதால் வேறொரு முடிவை எடுத்து தந்தை மரணத்திற்கு பலி வாங்குவது தான் மற்ற கதை. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை தனுஷ் - சாய் பல்லவி - மம்மூட்டி ரொல் சிறப்பாக இருக்கிறது.

சாய் பல்லவி
தந்தை உடலை தனுஷ் ஏந்தும் காட்சி கலங்கடிக்க வைக்கிறது. சாய் பல்லவி படத்திற்கு மிகப்பெரிய தூண். சாய் பல்லவியின் சண்டைக் காட்சிகளும் சிறப்பு. ஸ்ரீலீதா தனக்கு கொடுக்கப்பட்ட ரோலில் அழகாக நடித்துள்ளார். படத்தின் மற்றொரு ஹீரோ, சாய் அபியங்கர் தான். பின்னணி இசையில் பின்னி இருக்கிறார். முதல் பாதியை போல் இரண்டாம் பாதியும் விறுவிறுப்பாக இருந்திருக்கலாமோ என்ற எண்ண இருக்கிறது. மற்றபடி படத்தை பார்க்கலாம், ஆனால் தனுஷின் கம்பேக் படமாக O.M: Operation mole இருக்காது.