வலிமை, RRR படம் வெளியாகும்! ஆனால் வசூலில் கண்டபடி அடிவாங்கப்போகுதா?

ajith valimai ramcharan rrrmovie omicron nightlockdown
By Edward Dec 30, 2021 10:40 AM GMT
Report

ஒட்டுமொத்த இந்தியாவையும் கொரோனாவிற்கு பிறகு அதிரவைத்து வருவது ஒமிக்ரான் வைரஸின் பாதிப்பு! ஆயிரத்தை தொடவிருக்கும் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை போகபோக அதிகரிக்கும் என்றும் கூறி வருகிறார்கள் நிபுணர்கள். இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் அடுத்தடுத்து இரவு நேர லாக்டவுனை அமல் படுத்து வருகிறார்கள். டெல்லி, மத்தியபிரதேஷ், உத்திரபிரதேஷ், ஹரியானா உள்ளிட்ட வட இந்திய மாநிலகளும் ஊரடங்கை அறிவித்துள்ளது.

இதில் சினிமாத்துறைக்கும் மிகப்பெரிய பாதிப்பையும் கொடுத்துள்ளது. டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் தியேட்டர்களை மூடியுள்ளனர். இது தொடர்ந்தால் தென்னிந்திய மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் 31 டிசம்பரில் இரவு 12 மணிக்கு மேல் வாகனத்திற்கு தடை என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படியொரு நிலையில் அடுத்தாண்டு ஆரம்பத்தில் இரவு நேர ஊரடங்கை முழுமையாக அமல்ப்படுத்தப்படும் என்ற செய்திகளும் கசிந்துள்ளது.

இதனால் பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் வலிமை மற்றும் RRR படங்கள் வசூலில் அடிவாங்கப்போகும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் பகல் நேரத்தில் படங்களை பார்ப்பதைவிட இரவில் தான் படங்களை பார்ப்பவர்கள் அதிகமாக காணப்படுகிறார்கள்.

அப்படி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு செயல்பட்டால் முற்றிலும் இரு படங்களின் வசூல் அடிவாங்கும் என்றும் சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.