எஸ்.ஜே. சூர்யாவின் கில்லர் பட படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு ஒருவர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

S J Surya S.J.Suryah
By Karthick Raja Jun 03, 2026 11:00 AM GMT
Report

எஸ்.ஜே. சூர்யா இயக்கி, ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் கில்லர். இப்படத்தில் இளம் நடிகை ப்ரீத் அஸ்ராணி ஹீரோயினாக நடித்து வருகிறார்.

கில்லர் படத்தின் படப்பிடிப்பு கடந்த மூன்று நாட்களாக சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில்லில் படப்பிடிப்பு நடந்து வந்துள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை 5.30 மணி அளவில் படப்பிடிப்பு தளத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.

எஸ்.ஜே. சூர்யாவின் கில்லர் பட படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு ஒருவர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம் | One Person Dies In Accident On Set Killer Movie

எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால், அதில் மதன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காயமடைந்த தினகரன், சூர்யா மற்றும் சக்திவேல் ஆகியோர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

எஸ்.ஜே. சூர்யாவின் கில்லர் பட படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு ஒருவர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம் | One Person Dies In Accident On Set Killer Movie