2 பேரை நம்பினேன் சொதப்பிட்டாங்க!! CSK தோல்விக்கு காரணம் இதுதான்!! கேப்டன் ருதுராஜ்..

Ruturaj Gaikwad Chennai Super Kings Punjab Kings IPL 2026
By Edward Apr 04, 2026 05:30 AM GMT
Report

CSK தோல்வி

ஐபிஎல் 2026 தொடரில் தன்னுடைய இரண்டாவது போட்டியை மார்ச் 3 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது.

2 பேரை நம்பினேன் சொதப்பிட்டாங்க!! CSK தோல்விக்கு காரணம் இதுதான்!! கேப்டன் ருதுராஜ்.. | Our Team Spinners Not Performed Well Says Ruturaj

பஞ்சாப் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த நிலையில், முதலில் ஆடிய சென்னை அணி சிறப்பாக ஆடி 210 இலக்கை நிர்ணயம் செய்தது. அதனைதொடர்ந்து ஆடிய பஞ்சாப் வீரர்கள் சிறப்பாக விளையாடி 19வது ஓவரிலே ஆட்டத்தை முடித்து வெற்றியை பெற்றனர்.

இதனையடுத்து சென்னை தோல்வியால் சிஎஸ்கே ரசிகர்கள் புலம்பி வரும் நிலையில், இந்த இரு வீரர்களை நம்பினேன் ஆனால் அவர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்று கூறியிருக்கிறார் சென்னை அணி கேப்டன் ருதுராஜ்.

2 பேரை நம்பினேன் சொதப்பிட்டாங்க!! CSK தோல்விக்கு காரணம் இதுதான்!! கேப்டன் ருதுராஜ்.. | Our Team Spinners Not Performed Well Says Ruturaj

கேப்டன் ருதுராஜ்

அவர் பேசுகையில், முதலில் களமிறங்கி, நல்ல ஸ்கோரை அடித்தோம், அப்படியிருந்தும், இம்பாக்ட் வீரர் இடத்தில் ராகுல் சஹாரை கொண்டு வந்தோம். ஆனால், சஹாரும், நூர் அகமதுவும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் என்பதால், பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்பினேன். இருவரும் இன்று சிறப்பாக பந்துவீசவில்லை. இதனால்தான் வெற்றிபெற முடியாமல் போனதாக ருதுராஜ் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery