கலாச்சாரத்தை பற்றி கிளாஸ் எடுத்த ஓவியா!! ரசிகரிடம் அப்படி நடக்க சொன்னீங்களே அப்போ தெரியலையா.?
தமிழ் சினிமாவில் நாலை நமதே, மன்மதன் அம்பு போன்ற படங்களில் மலையாள நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஓவியா. களவாணி படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்ற ஓவியா முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, மதயானை கூட்டம், 144, ஹெல்லோ நான் பேய் பேசுரேன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
இதையடுத்து வாய்ப்பில்லாமல் இருந்த ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் தன் இடத்தினை பிடிக்க ஆரம்பித்தார். எதார்த்தமான நடவடிக்கையும், குழந்தைத்தனமான பேச்சு என பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை ஈர்த்தார்.
அதன்பின் பேசும் பேச்சை கொண்டு சர்ச்சையிலும் சிக்கினார். ரசிகர் ஒருவர் தற்போது தான் சுய இன்பம் செய்து முடித்தேன் என்று கூற, ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுப்பதற்கு பதிலாக, சுயஇன்பம் நல்லது! நான் சொல்வது சரியானதா? மேம் என்று அதற்கு சற்றும் தாமதிக்காமல் உடனடியாக உண்மை என்று பதிலளித்து சர்ச்சையில் சிக்கினார்.
True !
— Oviyaa (@OviyaaSweetz) July 8, 2020
அதேபோல் ஒரு பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமானால் அதில் உள்ள நல்லது, கெட்டது அனைத்தையும் வெளிப்படையாக பேச வேண்டும் அப்போதுதான் அதற்கு தீர்வு கிடைக்கும். கலாச்சாரம் என்ற பெயரில் நாம் எதையும் மறைத்து வைக்க கூடாது.
வெளிப்படையாகப் பேசுவதில் தப்பு ஒன்றும் கிடையாது என்று கூறியுள்ளார். மேலும், சிறுவயதில் இருந்தே நாம் இப்படி சொல்லிக் கொடுத்து வளர்த்தால் தான் எதிர்காலத்தில் பிள்ளைகள் எந்தவிதமான குற்ற செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள்.
அதனால் ஒரு நல்ல தலைமுறையை உருவாக்குவது பெற்றோர்களின் கையில் உள்ளது என கூறியுள்ளார். ஏற்கனவே ஓவியாவை பற்றி பத்திரிக்கையாளர் பயில்வான் கண்டபடி பேசி வருவது சமீபத்தில் பிரச்சனையை ஏற்படுத்தியது.
தற்போது ஓவியா இப்படி பேசியது கலாச்சாரம் பேசும் நீங்கள் ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள் என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள் ரசிகர்கள்.