விஜய்யின் ஜல்லிக்கட்டு குட்டி ஸ்டோரி பேச்சு!! விளாசிய ஜூலி, ஓவியா...

Vijay Oviya Gossip Today Maria Juliana Thamizhaga Vetri Kazhagam
By Edward Feb 24, 2026 09:00 AM GMT
Report

விஜய் குட்டி கதை

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக நடத்தி வருகிறார்கள். அதேபோல் நடிகர் விஜய்யும் பல மாவட்டங்களுக்கு சென்று மக்களை தொடர்ச்சியாக சந்தித்து பேசி வருகிறார். பிப்ரவரி 23 ஆம் தேதி வேலூரில் விஜய், தவெக நிர்வாகிகள் சந்திப்பு நடத்தினார்.

விஜய்யின் ஜல்லிக்கட்டு குட்டி ஸ்டோரி பேச்சு!! விளாசிய ஜூலி, ஓவியா... | Oviya Cryptic Post About Tvk Vijay Vellore Speech

அப்போது பேசிய விஜய், ஜல்லிக்கட்டை பற்றிய குட்டி கதையை கூறினார். வழக்கம் போல் ஆளும் கட்சி திமுக, எதிர்கட்சி அதிமுகவை விமர்சித்துள்ளார். விஜய்யின் ஜல்லிக்கட்டு பற்றி குட்டி கதை சொன்னதை கண்டித்து பிக்பாஸ் ஜூலி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

விஜய்யின் பேச்சை கேட்டு தவெகவில் இருக்கும் மைனர்கள் ஜல்லிக்கட்டு காளையை அடக்க முயற்சித்து ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம், இதனால், தன் இஷ்டத்திற்கு பேசாமல் பொறுப்புடன் பேசும்படி ஜூலி அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

ஜூலி, ஓவியா

விஜய் மீது தொடர் விமர்சனங்கள் எழுந்து வந்தநிலையில் நடிகை ஓவியாவும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தபோது, விஜய்யை சிறையில் அடைக்கும்படி ஒரு இன்ஸ்டா பதிவினை போட்டார்.

விஜய்யின் ஜல்லிக்கட்டு குட்டி ஸ்டோரி பேச்சு!! விளாசிய ஜூலி, ஓவியா... | Oviya Cryptic Post About Tvk Vijay Vellore Speech

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவியா பிரான்ஸ் காஃப்காவின் வாக்கியம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு முட்டாள் என்பது ஒரு முட்டாள். இரண்டு முட்டாள்கள் என்பவர்கள் இரண்டு முட்டாள்கள். 10 ஆயிரம் முட்டாள்கள் சேர்ந்தால் ஒரு அரசியல் கட்சி என்று பகிர்ந்துள்ளார்.

மற்றொரு பதிவில், சிலர் பிறக்கும்போதே மகத்தானவர்களாக பிறக்கிறார்கள், சில மகத்தானவர்களாக மாறுகிறார்கள். இன்னும் சிலர் பிஆர் வைத்துக் கொள்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்க்கும் பலரும் ஜூலி, ஓவியாவை திட்டியபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.