பா ரஞ்சித்- சந்தோஷ் நாராயணனுக்கும் என்ன ஆனது! மகளால் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் இதுதானாம்..
தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சாதியை நோக்கி படமாக இயக்கி வெற்றிப்படங்களை கொடுத்து வருபவர் இயக்குநர் பா ரஞ்சித். இவரின் படங்களுக்கு அதிகமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை தான் இருக்கும் இருவரும் இணைந்து பல படங்களின் வெற்றியை கொடுத்து வந்தார்கள்.
இந்நிலையில், சந்தோஷ் நாராயணன் இசையில் அவரது மகள் தீ பாடிய பாடல்களான என்ஜாய் என்ஜாமி மற்றும் நீயே ஒளி பாடல் தற்போது இணையத்தில் சாதனைகளை பெற்று வருகிறது. அந்த இருபாடலையும் எழுதியவர் அறிவு என்பவர் தான். சமீபத்தில் பிரபல நாளிதழில் பாடல் பற்றி செய்திகள் வெளியானது.
அதில் தீ புகைப்படம் மட்டுமே இடம்பெற்றிந்தது. ஆனால் அறிவு பெயர் கூட இடம்பெறாமல் இருந்துள்ளது. அச்செய்தியில் பாடலை எழுதிய அறிவு பெயர் மறைக்கப்பட்டது என பா ரஞ்சித் குற்றம் சாட்டினை வைத்துள்ளார். இதனால் அப்படத்தில் பணியாற்றிய பிரபலம் ஒருவர் பா ரஞ்சித்தின் இந்த விமர்சனம் தன்னை காயப்படுத்தியதாகவும் தமிழ் கலைஞர்கலுக்கு பிரிவினையை ஏற்படுத்தும் வண்ணம் நடந்து கொள்கிறார் என்றும் கூறியிருந்தார்.
மகள் பெயர் வந்ததும் சந்தோஷப்பட்ட சந்தோஷ் நாராயணன் அறிவு பற்றி எதுவும் கூறாமல் இருந்தது ஏன் என்ற ஆதங்கம் இருந்தது என்று கூறியுள்ளார் பா ரஞ்சித்.
இதனால் இருவருக்கும் இடையில் பிரச்சனை வலுக்க இனி இருவரும் இணைந்து படங்களில் பணியாற்றுவார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.