கடைசி வரைக்கும் சிங்கிள் தான்!! இந்தியாவை வீழ்த்தினால் ஜிம்பாப்வே நபரை திருமணம் செய்வேன்... பாக் நடிகை
உலகக்கோப்பை டி20 போட்டிகள் தற்போது ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 12 அணிகள் இரு குரூப்பாக விளையாடி வரும் இப்போடி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. அரையிறுதி போட்டிக்காக பல அணிகள் போராடி வருகிறது.
குரூப் 2வில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே 3 போட்டிகளில் 2 தோல்வி 1 வெற்றியில் இருப்பதால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பினை மதில்மேல் பூனை இருப்பது போல் இருக்கிறார்கள். இன்று பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

அதேபோல் இந்திய அணி 4 போட்டியில் ஒரு தோல்வி, 3 வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ளது. கடைசி போட்டியாக ஜிம்பாப்வே அணியுடன் மோதவிருக்கிறது இந்திய அணி. தற்போது பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஷெகர் ஷின்வாரி ஒரு டிவிட் போட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்தியாவை தோற்கடித்தால் ஜிம்பாப்வே நபரை திருமணம் செய்வேன் என்று சவால் விட்டுள்ளார்.
I'll marry a Zimbabwean guy, if their team miraculously beats India in next match ?
— Sehar Shinwari (@SeharShinwari) November 3, 2022