பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரை அசிங்கப்படுத்திய விஜய்யின் இயக்குனர் வம்சி.. இதெல்லாம் கவனிக்க மாட்டிங்களா தளபதி

Vijay Star Vijay Varisu
By Kathick Aug 30, 2022 06:45 AM GMT
Report

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல சீரியல் நடிகர் ரவி சந்திரனை கமிட் செய்துள்ளனர்.

ரவி சந்திரன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரை அசிங்கப்படுத்திய விஜய்யின் இயக்குனர் வம்சி.. இதெல்லாம் கவனிக்க மாட்டிங்களா தளபதி | Pandian Stores Actor Insulted By Vijay Director

வாரிசு படத்தில் கமிட்டான ரவி சந்திரன் முதல் நாள் படத்தில் நடிக்க சென்றுள்ளார். அங்கு கெட்டப் மற்றும் மேக்கப் போட்டு முடித்தவுடன் காட்சியில் நடிக்க சென்றுள்ளார் ரவி சந்திரன். ஆனால், ரவி சந்திரனின் லுக்கை பார்த்துவிட்டு இவர் ரிச்சாக தெரிகிறார் என்று சொல்லிவிட்டாராம் இயக்குனர் வம்சி. இந்த ஒரு காரணத்தால் ரவி சந்திரனை படத்திலிருந்து தூக்கிவிட்டனர். இதனால், மன உளைச்சலுக்கு ரவி சந்திரன் ஆளாகிவிட்டாராம்.

நான் பேசும் வசனம் சரியாக இல்லை, என்னுடைய நடிப்பு நன்றாக இல்லை என்றால், என்னை படத்திலிருந்து ரிஜெட் செய்வது நியாயம். ஆனால், ஒரு நடிகரை கூப்பிட்டு விட்டு கெட்டப், மேக்கப் போட்ட பின் காட்சியில் நடிக்கும் பொழுது ரிச்சாக தெரிகிறார் என்று சொல்லி ரிஜெட் செய்ததாக எந்த விதத்தில் நியாயம் என்று ரவி சந்திரன் படத்தின் மேனேஜர் இடம் கேட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகரை அசிங்கப்படுத்திய விஜய்யின் இயக்குனர் வம்சி.. இதெல்லாம் கவனிக்க மாட்டிங்களா தளபதி | Pandian Stores Actor Insulted By Vijay Director

படத்தின் மேனேஜர் நடிகர் ரவி சந்திரனிடம் பல முறை மன்னிப்பு கேட்டபிறகே ரவி சந்திரன் மனமிரங்கியுள்ளார். படப்பிடிப்பில் ஒரு நடிகராக இப்படி நடக்கும் விஷயங்களை நடிகர் விஜய் கவனிப்பாரா மாட்டாரா என்று தற்போது சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கேள்வி கேட்டக துவங்கியுள்ளனர்.