பொண்ணா பொறந்தாலே இப்படிதான் பேசுவீங்களா!! பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா காட்டம்..
ஹேமா ராஜ்குமார்
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் தான் நடிகை ஹேமா ராஜ்குமார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனா ரோலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்று வருகிறார்.
சமீபத்தில் ஹேமா அளித்த பேட்டியொன்றில் பொண்ணா பொறந்தாலே தப்பா பேசுவீங்களா? என்று கடுமையாக பேசியிருக்கிறார்.

பொண்ணா பொறந்தாலே
சென்னையில் இன்ஸ்டா இன்ஃபுளூயன்சர் நாகலட்சுமி என்பவரை அவரது கணவர் கொலை செய்த சம்பவத்தை வைத்து நெட்டிசன்கள் பலரும் மோசமான கருத்துக்களை முன்வைத்து வந்தனர்.
அதை தாங்கிக்கொள்ள முடியாத ஹேமா ராஜ்குமார், அது எப்படி பொண்ணு இருந்தாலும், இறந்தாலும் தப்பா பேசுறாங்க, இறந்த பெண்ணிற்கு மட்டும் தான் உண்மையும் வலியும் என்னனு தெரியும்.
காரணம் தெரியாமல் நீங்க எப்படி முடிவு பண்ணுவீர்கள். பொண்ணுங்கல சாமி மாதிரி பார்க்கணும்னு சொல்றது வாய் பேச்சு தான் போல. உயிரோட நடமாடுற ஒரு பிணமா தான் பாக்குறாங்க என்று கூறியிருக்கிறார் ஹேமா ராஜ்குமார்.