குழந்தையுடன் நடுரோட்டு வந்த சீரியல்! பாண்டியன் ஸ்டோரிஸில் நடப்பது என்ன?

serial television pandian stores
By Edward Feb 10, 2022 11:30 AM GMT
Report

தொலைக்காட்சி தொடரில் தற்போது மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியலில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பியின் அன்பை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த சீரியலில் புது கடையை கட்டி துவக்க விழா நடத்த திட்டமிட்டிருந்தனர்.

அதற்கு அத்துமீறி கட்டடம் கட்டியதாக கூறி அதிகாரிகள் சீல் வைத்து கடையை இடிக்க உத்திரவிட்டு சென்றுள்ளனர். இதனால் என்ன செய்வது என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே சோகத்தில் இருந்து வருகிறார்கள்.

அதற்கு காரணம் நகராட்சி அலுவலக அதிகாரியின் மகனை கண்ணனுக்காக கதிர் அடித்திருப்பார். அதன் கோபத்தை காட்ட நகராட்சி அலுவல நிர்வாகி நடத்தும் பிரச்சனையாக இருந்துள்ளது.

இதற்கு மூர்த்தி நகராட்சி அலுவலகத்தின் வெளியே தர்ணா போராட்டம் செய்துள்ளார். இதற்கு அவரின் மனைவி தனம் கைக்குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து ரோட்டில் உட்கார்ந்து போராட்டம் நடத்தியுள்ளனர்.