வியாபாரம் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ்-ஐ இழுத்து மூடும் நிலை!! நடுத்தெருவுக்கு வருவாரா பாண்டியன்?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் தற்போது, இத்தனை காலமாக தனது வீட்டில் இருந்து கொண்டு தனது சாப்பாட்டில் வளர்ந்த பழவேல் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு எதிராகவே புதிய கடையை திறந்திருப்பதை நினைத்த பாண்டியன் - கோமதி, தனக்கே துரோகம் செய்துவிட்டதாக கூறி வீட்டைவிட்டு வெளியில் துரத்திவிட்டார்.

ஏற்கனவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் இருந்து மயிலின் தந்தை பணத்தை ஆட்டையை போட்டு வருகிறார். இந்த சூழல் இப்படி இருக்க இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் அடுத்தடுத்து பாண்டியன் கடன் வாங்க வேண்டி வரும்.
இதன்மூலமாக கடையில் வியாபாரம் இல்லாமல் நடுத்தெருவுக்கு வரும் நிலை வரக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பழனிவேல் ஆரம்பித்திருக்கும் காந்திமதி ஸ்டோர்ஸ் கடைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கும் இடையில் கிட்டத்தட்ட 15 கடைகள் இருக்கிறதாம். அப்படியெல்லாம் இருக்கும்போது எப்படி வியாபாரம் நடக்கும் எப்படி வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த சீரியலில் ஒவ்வொருவரும் பேசும்போதும் சரி நடந்து கொள்வதும் சரி, ஓவ்வொரு காரணம் இருக்கிறது. பாண்டியனும் பழனிவேல் கடைத்திறந்ததை தொடர்ந்து , நான் ஒன்றும் நடுத்தெருவுக்கு வந்துவிட மாட்டேன் என்ற டயலாக் பேசியிருந்தார். இதைவைத்து எப்படியும் இப்படியொரு காட்சிகள் வரக்கூடும் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.