சென்சார் சான்றிதழ் கிடைத்த மகிழ்ச்சியில் பராசக்தி!! என்னென்ன Cut பண்ணாங்க..
பராசக்தி சென்சார்
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் பராசக்தி. ஜிவி பிரகாஷ் குமார் இசையில் நாளை இப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில், தணிக்கை குழுவில் இருந்து சென்சார் சான்றிதழ் அளிக்காமல் இருந்தது. தற்போது தணிக்கை குழுவினர் சான்றிதழை அளித்துள்ளனர்.

முதலில் படத்தை பார்த்துவிட்டு அதிகாரிகள் சில மாற்றங்களை சொல்லியுள்ளனர், அதை செய்துவிட்டு மறு ஆய்வு கமிட்டிக்கு படக்குழு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி உள்ளிட்டவர்கள் தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுத்ததாகவும் அதை இயக்குநர் மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
மொத்தம் 25 இடங்களில் அதிகாரிகள் கட் சொன்னதாகவும் தெரிகிறது. ஆனாலும் சுதா கொங்கரா அந்தக்காட்சிகளின் முக்கியத்துவத்தை கூறி, அவைகளை நீக்கினால் படத்தின் பலமே போய்விடும் என்று சண்டை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தாலும் சென்சார் சான்றிதழ் இழுப்பறி நீடித்து, தற்போது கொடுத்துள்ளனர்.

ரன்னிங் டைம்
நாளை படம் வெளியாகுமா? ஆகாதா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியிலும் எழுந்து வந்தது. தற்போது பராசக்தி படத்தின் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 42 நிமிடங்கள் என்றும் நாளை ரிலீஸ் கன்பார்ஃம் என்றும் தெரிவித்துள்ளனர் படக்குழுவினர். தற்போது பராசக்தி படத்தின் புக்கிங் தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்கள் டிக்கெட்டுக்களை வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.