ரவிக்காக மட்டும்தான் ஓடும்..வேறு யாரும் தெரியல!! பராசக்தி படம் கெனிஷாவின் பார்வை..
பராசக்தி படம்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் இன்று ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ்யான படம் தான் பராசக்தி. பல போராட்டங்களுக்கு பின் நேற்று சென்சார் சான்றிதழ் அளிக்கப்பட்ட நிலையில், படக்குழுவினர் புக்கிங் செய்த சில மணிநேரத்தில் பல திரையங்குகளில் ஹவுஸ்ஃபுல் ஆனாது.

இந்நிலையில் பராசக்தி படம் எப்படி இருக்கிறது என்று சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். தற்போது ரவி மோகனின் தோழியும் பாடகியுமான கெனிஷா படத்தை பார்த்தப்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.

ரவிக்காக மட்டும்தான்
அதில், ’ரவி மோகன் வில்லனா பண்ணா என்ன..? ஹீரோவா பண்ணா என்ன..? ரவிக்காக மட்டும்தான் பராசக்தி ஓடும், என் கண்ணுக்கு வேற யாரும் தெரியல, அவருக்காகவே இந்த படம் பண்ணமாதிரி தெரியுது.
அவர் தான் நம்பர் 1 இந்த படத்துல, இரண்டாம் பாதியில் அவர தாண்டி படமே இல்லை, அவர் எப்பவுமே எவர்கிரீன் பெஸ்ட்’ என்று ஓபனாக பேசியிருக்கிறார் கெனிஷா.