பிரபாஸின் மாஸ் ஓபனிங்!! தி ராஜா சாப் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

Malavika Mohanan Prabhas Nidhhi Agerwal Telugu movie review The Raja Saab
By Edward Jan 10, 2026 12:30 PM GMT
Report

தி ராஜா சாப்

இயக்குநர் மாருதி எழுதி இயக்கிய தி ராஜா சாப் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் இருக்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகைகள் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் நடித்துள்ளனர்.

இப்படம் சுமார் 2 ஆண்டுகளாக ஷூட்டிங் நடந்து முடிந்து தற்போது ரிலீஸாகியுள்ளது. பான் இந்தியா ஸ்டாராக திகழ்ந்து வரும் பிரபாஸின் எந்த படமாக இருந்தாலும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள்.

பிரபாஸின் மாஸ் ஓபனிங்!! தி ராஜா சாப் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? | The Raja Saab Opens With 112Cr Worldwide On Day 1

அப்படி வெளியான தி ராஜா சாப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் டப்பிங்கில் பல நகைச்சுவை காட்சிகள் ஒர்க்கவுட் ஆகவில்லை என்று கூறுகிறார்கள்.

முதல் நாள் வசூல்

இந்நிலையில் தி ராஜா சாப் படம் ரிலீஸான முதல் நாளிலேயே இந்தியாவில் சுமார் ரூ. 54.15 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எப்படியும் உலகம் முழுவதும் சேர்த்து ரூ.120கோடியை பெற்றுவிடும் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது உலகம் முழுவதிலும் சேர்ந்து தி ராஜா சாப் படம் மொத்தம் ரூ.112 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் தன்னுடைய ராஜ்ஜியத்தை பிடித்து வருகிறது.