வாழ்வை தொலைக்க கூட்டம் போடாதீர்கள்.. விஜய் பிரச்சாரம் குறித்து நடிகர் பார்த்திபன் பரபரப்பு!

Parthiban Vijay Tamil Cinema
By Bhavya Sep 28, 2025 05:30 AM GMT
Report

விஜய் 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், கரூரில் நேற்று அவர் பிரச்சாரம் செய்தபோது, அதில் கலந்து கொண்ட தவெக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள், பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என மொத்தம் 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த செய்தி மொத்த தமிழநாட்டையும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாக்கியுள்ளது.

வாழ்வை தொலைக்க கூட்டம் போடாதீர்கள்.. விஜய் பிரச்சாரம் குறித்து நடிகர் பார்த்திபன் பரபரப்பு! | Parthiban About Vijay Issue Details

பார்த்திபன் பரபரப்பு!

இந்நிலையில், தற்போது இந்த செய்தி குறித்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் அவரது ட்விட்டர் தளத்தில் துயரக் கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், " கூட்டம்’ என்ற ஒற்றை வார்த்தைக்கு பின் 10,100,1000,1000000000000000000000 போன்ற பூஜ்ய உயிர்களின் அன்பும், பாசமும், தன்னலமற்ற ஊக்கப்படுத்துதலும், வலியும், வேதனையும் முடிவில் கேள்விக் கேட்பாறற்ற பிணங்களாய் வெள்ளை போர்த்தி,

வண்ண மாலை சாத்தி,(இருந்தால்) உறவினர்களின் கண்ணீர் ஆற்றில் கரைக்கச் சொல்லி ‘கொடுத்து வைத்தவர்கள்’ ஓட்டு போடுங்கள் - விரும்பும் நபர்களுக்கு, ஆனால் கூட்டம் போடாதீர்கள் - வாழ்வை தொலைக்க! அதிலும் இறுதி ஊர்வலத்தில் பிய்த்து எறியப்படும் பிஞ்சு பூக்களாய் குழந்தைகளை பலியாக்காதீர்கள்! என்று தெரிவித்துள்ளார்.