மேடையிலேயே அசிங்கப்படுத்திய இசைஞானி! உண்மையை உடைத்த இயக்குநர் பார்த்திபன்..

தமிழ் சினிமாவின் இசையின் ஜாம்பவனாக இருப்பவர் இசைஞானி இளையராஜா. 10ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடலுக்கு இசையமைத்த இளையராஜா சமீபத்தில் இசை விழா ஒன்றில் பார்த்திபனை உனக்கு இசையை பற்றி என்ன தெரியும் எதுக்கு இதெல்லாம் கேக்குற என்று மேடையிலேயே அசிங்கப்படுத்திய வீடியோ வைரலாகி விமர்சனமாகியது.

இதுபற்றி பார்த்திபன் சமீபத்தில் பேட்டியொன்றில் கூறியுள்ளார். நான் ஆரம்பகட்ட சினிமா வாழ்க்கையில் 100 பேரில் ஒருவனாக வாய்ப்புக்காக காத்திருந்தேன். பிரபலங்கள் செல்லும் போது என்னை பார்த்து கூப்பிடமாட்டாங்களா என்று நினைக்கும் போதுதான் பாரதிராஜாவின் கண்ணில் பட்டேன். அப்படி வந்தனுக்கு இருவர்தான் முக்கியமானவர்கள்.

அதில் ஒருவர் தான் இசைஞானி என கூறியுள்ளார். நான் ராஜா சாரின் அடிமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்