நடிகர் யாஷின் பாதுகாவலருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.. அடேங்கப்பா இவ்வளவா
கே.ஜி.எப் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகராக மாறியவர் யாஷ். இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது டாக்சிக் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
மேலும், பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் ராமாயணா படத்தில் இராவணன் கதாபாத்திரத்தில் யாஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் அனைவரும் பாதுகாவலர்களை வைத்துக்கொள்வார்கள்.
அந்த வகையில் நடிகர் யாஷுக்கு பாதுகாவலராக இருப்பவர் ஸ்ரீனிவாஸ். இந்த நிலையில், யாஷின் பாதுகாவலராக இருக்கும் இவருடைய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீநிவாஸுக்கு ஒரு மாத சம்பளமாக ரூ. 10 லட்சத்துக்கும் மேல் யாஷ் கொடுப்பதாக கூறப்படுகிறது.
மாதம் ரூ. 10 லட்சத்துக்கும் மேல் சம்பளமாக ஸ்ரீனிவாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சொகுசு கார் மற்றும் பைக்குடன் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்க..