மகனுக்காக வாய்ப்பு கேட்டு அலைந்த விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர்? உண்மையை உடைத்த இயக்குனர்

Vijay R. Parthiban S. A. Chandrasekhar
By Jai Jul 18, 2022 09:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தன் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் சோலோ நடிகராக நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் அடுத்தடுத்த தந்தையின் அறிமுகத்தால் அவர் இயக்கத்திலேயே விஜய் நடித்து வந்தார்.

விஜய்க்காக எஸ் ஏ சி அவர்கள் மெனக்கெட்டு பலரிடம் வாய்ப்பும் கேட்டு கெஞ்சி இருக்கிறார். அப்படி வளர்ந்தவர் தான் தற்போது விஜய் முன்னணி நடிகராகவும் 100 கோடி சம்பளம் வாங்கும் டாப் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். மாஸ் நடிகராக இருக்கும் விஜய் சமீபகாலமாக அப்பா அம்மாவை கவனிக்காமல் இருந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாதம் ஒருமுறை விஜய் எங்களுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்ற கோரிக்கையையும் ஆதங்கமாக தெரிவித்தார் விஜய் அப்பா. அப்படி 80 வது பிறந்த நாளுக்குக்கூட விஜய் செல்லாமல் அவர்களை ஒதுக்கி வைத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.

இந்நிலையில் விஜய்க்காக எஸ் ஏ சந்திரசேகர் செய்த செயலை இயக்குனர் ஆர் பார்த்திபன் பேட்டியொன்றில் கூறியுள்ளார். எங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு ஆரம்பகாலத்தில் எஸ் ஏ சி அவர்கள் விஜய்யை கூட்டிக்கொண்டு வருவார்.

அப்போது ஆரம்பகாலத்தில் விஜய் வாய்ப்பில்லாமல் இருந்த தருணம். என்னிடம் என் பையனுக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுங்கள் என்று என்னிடம் கேட்டார்.

விஜயகாந்த் படத்துல விஜய்யை கொண்டு வந்தது என சிறியசிறிய ரோலில் நடித்த விஜய் தற்போது ஹீரோவாக வளர்ந்த பின் அவர்களே அவங்கள் விசயங்கலை தேடிக்கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார் பார்த்திபன்.