சீதாவுடன் விவாகரத்து!! இரண்டாம் திருமணம் செய்யாமல் இருக்க இதான் காரணம்!! பார்த்திபன்..
பார்த்திபன்
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முகத்திறமையுடன் தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டு வருபவர் பார்த்திபன். கடந்த 1990ல் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்த பார்த்திபன் இரண்டு மகள், ஒரு மகனை பெற்றெடுத்தார்.
அதன்பின் 11 ஆண்டுகளுக்கு பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். பார்த்திபனை விவாகரத்து செய்த 9 ஆண்டுகளுக்கு பின் சீதா நடிகர் சதீஷ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
அவரிடமும் கருத்து வேறுபாடு ஏற்பட 2016 ல் விவாகரத்து பெற்றார். ஆனால் நடிகர் பார்த்திபன் மட்டும் விவாகரத்துக்கு பின் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதற்கான காரணத்தை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கூறியிருக்கிறார்.
இரண்டாம் திருமணம்
அதில், சீதாவுக்கு பின் யாரையும் என் மனைவியாக ஏற்கமுடியவில்லை என்பதால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரைப் பிரிந்தப்பின் அவரது தாயார் இறப்பின் போதே அவரை கடைசியாக சந்தித்தேன்.
இந்த வேகமான உலகில் உறவுகள் நிலையற்றதாக இருப்பதால் அதனுடன் பயணிக்காமல் அதற்கு பதிலாக நினைவுகளுடன் பயணிக்கத் தொடங்கிவிட்டேன். இதுவும் ஒருவிதமான காதலின் வடிவம் தான் என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்,