எல்லா நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்தார்களா?.. நடிகை பார்வதி ஓபன் டாக்!!
சமீபத்தில் மலையாள சினிமாவில் பாலியல் ரீதியிலான சீண்டல்கள் தலைவிரித்தாடுவதாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிட்டது.இந்த விஷயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் பார்வதி, ஹேமா கமிட்டி தொடர்பாக பேசியுள்ளார்.
அதில் அவர், ஹோமா கமிஷன் அறிக்கையை வைத்து, சினிமாத்துறையில் உள்ள அனைத்து பெண்களும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தவர்கள் என்பது போல பொத்தம் பொதுவாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் அவர், தான் கடந்த 6-7 ஆண்டுகளாக இது பற்றி குரல் கொடுத்து வருவதால் தனக்கு மலையாள சினிமாவில் வாய்ப்புகள் யாரும் தருவதில்லை என்றும் பார்வதி கூறியுள்ளார்.
இதே போல பிரபல நடிகர் டொவினோ தாமஸூம், ஹேமா அறிக்கையில் ஒட்டுமொத்த கேரள சினிமாவையும் குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.