அமீர் - பாவ்னி லவ் மேட்ட அஜித்துக்கு தெரிந்து என்ன செய்தார் தெரியுமா? வியப்பில் பிக்பாஸ் போட்டியாளர்கள்..
தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற பெயரோடும் தல என்று ரசிகர்களால் புகழப்பட்டு வருபவருமான அஜித் நடிப்பில் துணிவு படம் நேற்று வெளியாகியது.
மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகி ரசிகர்களை திருப்திப்படுத்தியதாக படத்தினை பார்த்தவர்கள் கூறி வருகிறார்கள். இந்நிலையில் துணிவு படத்தில் அமீர் மற்றும் பாவ்னி ஜோடிகள் நடித்துள்ளனர்.
அஜித்துடன் நடித்த அனுபவத்தையும் தங்களின் காதல் மேட்டர் தெரிந்து அஜித் என்ன கூறினார் என்பதையும் ஓப்பனாக கூறியுள்ளனர். அமீர் அஜித், அருகில் அமரவேண்டும் என்பதால் அசையாமல் அப்படியே இருப்பாராம்.
அதேபோல் தான் வரும் போது யாரும் எந்திரிக்கக்கூடாது என்றும் மீறினால் பெஃபிகாயில் போட்டு ஒட்டிவிடுவேன் என்றும் மிரட்டுவாராம்.
அதேபோல் அமீர் - பாவ்னி காதல் மேட்டர் தெரிந்ததும் அவர்களை கூப்பிட்டு, வாழ்க்கையில் என்ன செய்யவேண்டும் என்பதையும் என்ன செய்யக்கூடாது என்பதையும் விளக்கி எப்படி வாழ்க்கையை கொண்டு போகவேண்டும் என்பதையும் கூறி அறிவுரையாக கூறுவார் என அமீர் பாவ்னி ஜோடி தெரிவித்துள்ளனர்.