தொகுப்பாளினியை ஜோடியாக்க நினைத்த ரஜினிகாந்த்.. யார் அந்த தொகுப்பாளினி தெரியுமா
நடிகைகளுக்கு இணையான புகழை ரசிகர்களிடையே பெற்றிருந்தவர் தொகுப்பாளினி பெப்சி உமா. தொகுப்பாளினியாக இருந்த இவர், சின்னத்திரையின் மூலம் பல லட்சம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
இவர் பிரபலமாக இருந்த காலகட்டத்தில், சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் பல வாய்ப்புகள் இவரை தேடி வந்துள்ளது. ஆம், ரஜினிகாந்தின் முத்து திரைப்படத்தில் முதன் முதலில் ஹீரோயினாக நடிக்க பெப்சி உமாவை கேட்டுள்ளாராம். இதை கேட்டதே நடிகர் ரஜினிகாந்த் தானாம். ஆனால், தன்னால் நடிக்க முடியாது என பெப்சி உமா மறுத்துவிட்டாராம்.
அதன்பின் தான் அந்த வாய்ப்பு நடிகை மீனாவிற்கு சென்றுள்ளது. இதன்பின் வேறொரு படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பெப்சி உமாவிற்கு வாய்ப்பு கிடைத்தும், அதனை அவர் மறுத்துள்ளார். மேலும் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் இவரை தேடி வந்ததாம். அதையும் அவர் மறுத்துவிட்டாராம்.
இப்படி தன்னை தேடி வந்த அனைத்து சினிமா வாய்ப்புகளுக்கும் நோ சொல்லி அனுப்பியுள்ளார். காரணம், அவருக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லையாம்.