பிரகாஷ் ராஜ் ஒன்னாநம்பர் பிராடு!! விஜய்யை கேள்வி கேட்டதற்கு இயக்குநர் பதிலடி..

Prakash Raj Vijay Gossip Today
By Jai May 01, 2026 11:00 AM GMT
Report

பிரகாஷ் ராஜ்

2026 சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் மே 4 ஆம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ளது. தேர்தல் குறித்து பல பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை கூறி வரும் நிலையில், இயக்குநர் பேரரசு அளித்த பேட்டியொன்றில் நடிகர் பிரகாஷ்ராஜ் பற்றி விமர்சித்து பேசியுள்ளார்.

பிரகாஷ் ராஜ் ஒன்னாநம்பர் பிராடு!! விஜய்யை கேள்வி கேட்டதற்கு இயக்குநர் பதிலடி.. | Perarasu Troll Prakash Raj For Speech About Vijay

அதில், நடிகர் பிரகாஷ் ராஜ், டிரைவர் மகனுக்கு விஜய் எப்படி சீட்டு கொடுத்தார் என்று கேட்டார். நான் அவரிடம் ஒரேவொரு கேல்வி கேட்கிறேன், பிரகாஷ் ராஜினி அப்பா யார்? அவர் என்ன வேலை பார்த்தார்.

பிரகாஷ் ராஜின் அப்பா பெரிய நடிகரா? இல்லை தயாரிப்பாளரா, அந்த வேலையை தான் பிரகாஷ் ராஜ் பார்த்தாரா? அதேபோல் கலைஞரின் அப்பா என்ன வேலை பார்த்தார், அவர் எப்படி அரசியலுக்கு வந்தார். திமுகவில் நேருவின் மகன் தேர்தலில் நிற்கிறார்.

பிரகாஷ் ராஜ் ஒன்னாநம்பர் பிராடு!! விஜய்யை கேள்வி கேட்டதற்கு இயக்குநர் பதிலடி.. | Perarasu Troll Prakash Raj For Speech About Vijay

அமைச்சர்கள் அனைவரும் அவர்களின் மகன்களையும் வளர்த்துக்கொண்டு இது ஆரோக்கியமானதா? பின் எப்படி நீங்கள் சமூக நீதியை பற்றி பேசுகிறீர்கள்.

ஏற்கனவே அரசியலில் இருப்பவர்கள் அவர்களின் வாரிசு தான் அரசியலில் இருக்க வேண்டும் என்றால், சாமானியன் எப்படி அரசியலுக்கு வருவான். டிரைவர் மகனுக்கு விஜய் எப்படி சீட்டு கொடுத்தார் என்று வன்மத்துடன் பேசிய பிரகாஷ் ராஜ், ஒன்னா நம்பர் பிராடு.

இனி இவர் சுயமரியாதை, சமூக நீதி பற்றி பேசி மக்களை ஏமாற்றக்கூடாது. சாமனியர்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்று இயக்குநர் பேரரசு பேசியுள்ளார்.