42 ஆயிரம் கடன் பாக்கி வைத்த இளைஞர்!! வீட்டுக்கே சென்று அடிதடி செய்த பாலாஜியின் மனைவி நித்யா!!
சின்னத்திரை நகைச்சுவை கலைஞராக திகழ்ந்து விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருபவர் தாடி பாலாஜி. சில ஆண்டுகளுக்கு முன் அவரது மனைவி நித்யாவுடன் ஏற்பட்ட பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என்று எதிர்ப்பார்த்தப்பின்பும் பிரச்சனை தலைக்கேறி தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
தன் மகளுடன் மாதவரம் சாஸ்திரி நகரில் வசித்து வரும் நித்யா, பொன்னியம்மன் மேடு நகரை சேர்ந்த 29 வயதுள்ள கலைச்செல்வன் என்பவருக்கு 94 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார்.
கடன் கொடுத்ததில் 52 ஆயிரம் மட்டும் கொடுத்து மற்ற தொகையை கொடுக்காமல் நேரம் காழ்த்தியிருக்கிறார்.
இதனால் பொறுமை இழந்த நித்யா, அவரது வீட்டிற்க்கே சென்று பணத்தை கேட்டிருக்கிறார். இதனால் இருவருக்கும் தகறாறு ஏற்பட்டு கைகலப்பாகி அடிதடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இருவருக்கும் காயம் ஏற்பட்டு, நித்யா கொளத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை அளித்த புகாரில் போலிசார் இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.