பொன்னம்பலத்திற்கு விஷம் கொடுத்து குழிதோண்டி புதைத்த அண்ணன்.. வெளியான பரபரப்பு பேட்டி
90 களில் பிரபல வில்லன் நடிகராக வலம் வந்தவர் தான் பொன்னம்பலம். இவர் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் 1990 -ம் ஆண்டு வெளியான "மைக்கேல் மதன காமராஜன்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார். பொன்னம்பலம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2ல் பங்கேற்றார்.
பரபரப்பு பேட்டி
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பொன்னம்பலம் பல அதிர்ச்சியூட்டும் செய்திகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர், " என்னுடைய அண்ணன் எனக்கு மேனேஜராக பணி புரிந்தார். நான் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன்".
"ஆனால் அவர் எனக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். மேலும் அவர் பொம்மைகள் மற்றும் சில பொருட்களை வைத்து பில்லி சூனியம் செய்துள்ளார். என்னை கொன்று புதைப்பது போன்ற யாகங்கள் செய்தார்" என்று வருத்தத்துடன் நடிகர் பொன்னம்பலம் கூறியுள்ளார்.