12 ஆண்டுகளை கடந்த பூஜா ஹெக்டே.. இத்தனை கோடி சொத்து சேர்த்துள்ளாரா!!
Pooja Hegde
Indian Actress
Actress
Net worth
By Kathick
சினிமாவில் 12 ஆண்டுகளை கடந்துள்ள நடிகை பூஜா ஹெக்டே, தனது 12 வருட சினிமா பயணம் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார்.
இதில் "12 வருட சினிமா பயணம் எனக்கு ரோலர் கோஸ்டரில் சவாரி செய்தது போல் இருந்தது. அதில் வரும் ஏற்றம், இறக்கம், சரிவு போல், பல வெற்றிகளையும் தோல்விகளையும், உயர்வையும் தாழ்வையும் பாத்திருக்கிறேன்" என பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.
இந்த நிலையில், 12 ஆண்டுகளை சினிமாவில் கடந்துள்ள நடிகை பூஜா ஹெக்டேவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 50 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. 12 வருட சினிமா வாழ்க்கையில் பூஜா ஹெக்டே சேர்த்துள்ள சொத்து மதிப்பு இதுதான் என சொல்லப்படுகிறது. ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.